திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 11 ஜூன் 2022 (15:30 IST)

தமிழகத்தில் 4 நாட்களுக்கு சில பகுதிகளில் மழை! – வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் கோடைக்காலம் முடிய உள்ள நிலையில் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் முதலாக கோடைக்காலம் தொடங்கி நடந்து வந்தாலும் இடையே ஏற்பட்ட புயல் காரணமாக மே மாதத்தில் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தது. தற்போது கோடைக்கால முடிய உள்ள நிலையில் பல பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது.

இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதுபோல 13 முதல் 15ம் தேதி வரை 3 நாட்களுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியின் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.