1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu transport resumed today

தமிழகம் முழுவதும் 90 சதவீத பேருந்துகள் இயக்கம்! – போக்குவரத்துத் துறை!

Tamilnadu
இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இன்று தமிழகத்தில் 90 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய அரசை கண்டித்து இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் நேற்றும், இன்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் 11 தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் நேற்று தமிழகம் முழுவதும் 30 சதவீதம் பேருந்துகளே இயக்கப்பட்டதால் பொதுமக்கள் பயணம் செய்ய முடியாமல் கடும் சிரமங்களை சந்தித்தனர்.

சென்னையில் மக்கள் பலரும் மின்சார ரயில்களிலும், மெட்ரோ ரயில்களிலும் கூட்டம் கூட்டமாக சென்றதை காண முடிந்தது. இந்நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பலர் பணிக்கு திரும்புவார்கள் என தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று தெரிவித்திருந்தது.

தற்போது போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளதன்படி, தமிழகம் முழுவதும் 90 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. சென்னையில் 92 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் பிற பகுதிகளில் 68 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!