வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 29 மார்ச் 2022 (10:15 IST)

தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.352 கோடி ஒதுக்கீடு! – தமிழக அரசு அரசாணை!

நடப்பு ஆண்டிற்கான எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதிக்கான மீத தொகையை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தொகுதிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தொகுதி எம்.எல்.ஏக்களுக்கு மேம்பாட்டு நிதியாக ஆண்டுதோறும் ரூ.3 கோடி வழங்கப்படுகிறது. அதை கொண்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில் நடப்பு நிதியாண்டிற்கான எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் 50 சதவீதம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த நிலையில் மேம்பாட்டு பணிகளுக்காக மீத தொகையை வழங்கக் கோரி எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் மீத 50 சதவீத தொகையான ரூ.352 கோடியை நிதியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.