காத்திருக்குது கனமழை; எந்தெந்த மாவட்டங்களில்?? – வானிலை ஆய்வு மையம்!
அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலான மழை பெய்து வந்தது. இந்நிலையில் நாளை அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளதாகவும், இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.