1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu rain chances today

அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை!? – எந்தெந்த மாவட்டங்களில்?

Tamiilnadu
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கும் நிலையில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. கோடை காலத்திற்கு முன்னதாகவே வெயில் கொளுத்தும் நிலையில் சில பகுதிகளில் மழை பெய்வது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

இந்நிலையில் இன்று வெப்பசலனம் காரணமாக கன்னியாக்குமரி, திருநெல்வேலி, நாகப்பட்டிணம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மிதமான அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
சென்னையில் தொடர்ந்து சரியும் தங்கம் விலை!