1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (13:02 IST)

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையிலும் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. இந்நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக சில பகுதிகளில் மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, தென் தமிழக மாவட்டங்கள், நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.