புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 16 ஜனவரி 2022 (13:10 IST)

முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.3.44 கோடி அபராதம்! – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் குறித்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுவெளியில் மாஸ்க் அணியாமல் செல்லும் மக்களுக்கு அபாரத தொகை ரூ.200லிருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து இதுவரை ரூ.3.44 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் கடந்த 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை முகக்கவசம் அணியாமல் சென்றதாக 1.64 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.