திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 மே 2023 (09:49 IST)

கள்ளச்சாராய விற்பனை; 22 பேர் கைது! – தேடுதல் வேட்டைக்கு உத்தரவிட்ட டிஜிபி சைலேந்திரபாபு!

crime
மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த நிலையில் கள்ளச்சாராய கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டைக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் உதவித்தொகையாக வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அப்பகுதியில் பணியில் இருந்த காவலர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கள்ளச்சாராய கும்பலை பிடிக்க சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கடலூரில் கடந்த 24 மணி நேரத்தில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K