1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (17:33 IST)

நாகை பெட்ரோ கெமிக்கல் திட்டம் வாபஸ்! – தமிழக அரசு அறிவிப்பு!

நாகப்பட்டிணத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டம் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாகப்பட்டிணம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை உள்ளடக்கி பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க திட்டமிடபட்டு இருந்தது.

இதற்கு நாகப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் அமைக்கப்பட இருந்த பெட்ரோ கெமிக்கம் மண்டலம் திட்டம் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.