1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 ஜூலை 2020 (08:50 IST)

12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் எப்போது வாங்கலாம்? – கடும் கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மதிப்பெண் சான்றிதழ்களை பெறுவதற்கான தேதி குறித்து அரசு அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் ஆன்லைனில் வெளியாகின. அதை தொடர்ந்து கல்லூரி அட்மிசன் பணிகள் தொடங்கியுள்ளதால் மாணவர்கள் மூல மதிப்பெண் சான்றிதழை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் ஜூலை 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மதிப்பெண் சான்றிதழ் பெற கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளும் விளக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தேவையின்றி மாணவர்களை கூட்டம் கூட செய்யக்கூடாது. ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்கள் மட்டுமே வரவழைக்கப்பட வேண்டும்.

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள், வெளியூரில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தாமதமாக கூட மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.

மாணவர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வண்ணம் வரிசைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மாணவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்.

சான்றிதழ் அளிக்கும் ஆசிரியர்கள் மாஸ்க் அணிவதோடு கையுறைகளும் அணிய வேண்டும்.

பள்ளிக்கு வந்த மாணவர்கள் தேவையின்றி வெளியே செல்லவோ, ஒன்று கூடி நின்று பேசுதலோ கூடாது.

மறுகூட்டல், மறுதேர்விற்கு விண்ணப்பிக்க வரும் மாணவர்களுக்கு பள்ளியில் தனியறை ஒதுக்கப்படல் வேண்டும்.

சான்றிதழ் அளிக்க தொடங்கும் 24ம் தேதிக்கு முன்னதாக பள்ளிகள் கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.

கைகளை கழுவ பொதுப்பகுதிகளில் சோப் அல்லது சானிட்டைசர் போன்றவை வைக்க வேண்டும்.

இவ்வாறாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.