புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 6 மே 2019 (09:06 IST)

ஒடிசாவுக்கு 10 கோடி நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு !

ஃபானி புயலால் வரலாறு காணாத அளவுக்கு சேதங்களை எதிர்க்கொண்டு வரும் ஒடிசா மக்களுக்கு தமிழக அரசு சார்பாக 10 கோடி ரூபாய் நிவாரண நிதியாக அளிக்கப்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஃபானிப் புயல் ஒடிசாவில் கரையைக் கடந்துள்ளது. சூறாவளிக்காற்றும் புயல்மழையும் அங்கு ஏகப்பட்ட சேதங்கள் ஏற்படுத்தியுள்ளன. ஆனால் ஒடிசா மாநில அரசு சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பெரும் அளவிலான உயிர்ச்சேதத்தை தடுத்துள்ளது. இப்போது புயல் கரையைக் கடந்துள்ள நிலையில் சீரமைப்புப் பணிகளையும் வேகமாக மேற்கொண்டு வருகிறது. பல பகுதிகளில் மின்சாரம் முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் பலர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றன. மேலும் மொபைல் மற்றும் இணைய சேவைகள் முடங்கியுள்ளன.

இதைத் தொடர்ந்து ஒடிசா அரசு சீரமைப்ப்புப் பணிகளை மிக வேகமாக நடத்தி வருகிறது. மத்திய அரசு ஒடிசாவுக்கு அவசர நிதியாக ரூபாய் 1000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதையடுத்து தமிழக அரசின் சார்பாக ஒடிசா அரசுக்கு 10 கோடி ரூபாய் நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.  தமிழக அரசு சார்பில் வெளியான அறிக்கையில் ‘ ஒடிசாவில் புயல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தமிழக அரசு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறத்யு. மக்களின் துய்ரத்தில் பங்கு கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் வழங்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.