ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2022 (12:29 IST)

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்..? சிறப்பு குழுவை அமைத்த முதல்வர்!

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ள சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட செயலிகளில் மக்கள் பலர் பணத்தை இழந்து வருவதும், பலர் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது. இதை தடுக்க கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை விதித்து சட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்த சட்டம் சரியானதாக இல்லை என மீண்டும் வலுவான சட்டம் அமைக்குமாறு கூறி ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சூதாட்ட செயலிகளை தடை செய்வதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக உள்ளது.

இந்நிலையில் சூதாட்ட செயலிகளை தடை செய்வதற்கு சரியான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் சிறப்பு குழவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.