வேதா இல்லம் இனிமே ஜெயலலிதா நினைவு இல்லம்! – அரசு அவசர சட்டம்!

Jayalalitha house
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 22 மே 2020 (09:26 IST)
சென்னை போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கட்சியின் முன்னாள் பொது செயலாளருமான ஜெயலலிதாவின் வேதா இல்லம் சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ளது. அவர் இறந்து சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவரது வேதா இல்லத்தை அவரது நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியுள்ளது. இதன்மூலம் வேதா இல்லம் மற்றும் அதில் உள்ள பொருட்கள் யாவும் அரசுடமையாக்கப்படும்.

பின்னாட்களில் ஜெயலலிதா குறித்த வேறு சில நினைவு புகைப்படங்கள் போன்றவற்றையும் இணைத்து, அவரது அரசியல் செயல்பாடுகள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் வேதா இல்லம் மக்கள் சுற்றி பார்க்கும் வகையில் அமைக்கப்படலாம் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :