வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 22 மே 2020 (07:46 IST)

கொரோனா எதிரொலி: தமிழக அரசின் சிக்கன நடவடிக்கைகள்

கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக தமிழக அரசு அதிரடியாக சிக்கன நடவடிக்கைகளுகான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது
 
கொரோனாவுக்கு எதிரான போரில் தமிழக அரசு கடந்த சில மாதங்களாக தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இதற்காக கோடிக்கணக்கில் பணம் செலவழித்து வரும் நிலையில் தற்போது கொரோனாவுக்கு அதிக நிதியை செலவு செய்யப்படுவதால் அதனை ஈடுகட்ட தமிழக அரசு ஒரு சில அதிரடியான சிக்கன நடவடிக்கைகளை எடுத்துள்ளது 
 
இதன்படி அரசு உயரதிகாரிகள் உயர்வகுப்பு விமான பயணத்திற்கு இனி அனுமதி இல்லை என்றும், சால்வைகள் பூங்கொத்துகள் வழங்குவதற்கான செலவுகள் அறவே தவிர்க்கப்பட வேண்டும் என்றும், மேஜை நாற்காலிகள் உள்ளிட்ட அலுவலக தேவைகளை வாங்குவதை 50% குறைக்கப்பட வேண்டும் என்றும், அரசு செலவில் செய்யப்படும் விருந்து நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது என்றும், விளம்பர செலவுகளை 25% குறைத்துக்கொள்ளவும் அரசு துறைகளுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு அதிகாரிகள் அரசு செலவில் வெளிநாட்டு பயணம் செய்யவும் தடை விதித்துள்ளது.  மேற்கண்ட சிக்கன நடவடிக்கைகளால் அரசு அதிகாரிகள் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது