1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu corona cases increased as 67

தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 17 பேர்: 67 ஆக உயர்ந்த கொரோனா பாதிப்பு!

Tamilnadu
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக இருந்த நிலையில் ஒரே நாளில் மேலும் 17 பேர் பாதிக்கப்பட்டு எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று ஒரு நாளில் மட்டும் 17 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி ஈரோட்டில் 10 பேருக்கும், சென்னையில் 4 பேருக்கும், மதுரையில் 2 பேருக்கும், திருவாரூரில் ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 67 ஆக உயர்ந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஆயுதம் இல்லாமல் போருக்கு அனுப்புவது நியாயமா? அரசுக்கு கமல் கேள்வி!