திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 26 ஜூன் 2022 (11:48 IST)

ரோஹித் சர்மாவுக்கு கொரோனா: இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் இருந்து விலகலா?

Rohit Sharma
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சென்று உள்ள நிலையில் ஜூலை 1-ஆம் தேதி இரு நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது 
 
இந்த நிலையில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ள நிலையில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு திடீரென்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனது தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
 
ஜூலை 1ஆம் தேதி இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள நிலையில் ரோஹித் சர்மாவுக்கு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் இந்த போட்டியில் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது
 
இதனையடுத்து மாற்று ஏற்பாடு செய்ய பிசிசிஐ நிர்வாகம் தயாராகி வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது