திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 14 மார்ச் 2021 (10:14 IST)

ராசியான தொகுதிகளில் தொடரும் அமைச்சர்கள்! – அதிமுக வேட்பாளர் முழு பட்டியல்!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுக போட்டியிட உள்ள தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி பெரும்பான்மையான அமைச்சர்கள் தாங்கள் முன்னர் போட்டியிட்ட தொகுதிகளிலேயே மீண்டும் போட்டியிடுகின்றனர். அமைச்சர் காமராஜ் நன்னிலத்திலும், உடுமலைபேட்டை ராதாகிருஷ்ணன் உடுமலை பேட்டையிலும், ராஜேந்திர பாலாஜி ராஜபாளையத்திலும், வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் தவிர அனைத்து தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.