தமிழிசைக்கு முதல்வர் ஆசை வந்துவிட்டது: நாராயணசாமி குற்றச்சாட்டு

tamilisai
தமிழிசைக்கு முதல்வர் ஆசை வந்துவிட்டது: நாராயணசாமி
siva| Last Updated: செவ்வாய், 2 மார்ச் 2021 (22:06 IST)
புதுவை ஆளுநர் தமிழிசைக்கு முதல்வர் ஆசை வந்துவிட்டது என முன்னாள் புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

புதுவை பள்ளி மாணவர்களுக்கு தேர்வு தேதி குறித்த அறிவிப்பை இன்று ஆளுநர் தமிழிசை வெளியீட்டு உள்ளதை அடுத்து இதற்கு தனது கடும் கண்டனத்தை முதல்வர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

புதுவை மாணவர்களுக்கான பள்ளி தேர்வு தேதியை தமிழிசை அறிவித்துள்ளது சரியானதல்ல என்றும் மாணவர்களின் விஷயத்தில் ரிஸ்க் எடுக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் முதல்வர் ஆகலாம் என்று தமிழிசை ஏற்கனவே ஆசைப்பட்டார் என்றும் அது நடக்காது என்று தெரிந்த பின் தற்போது புதுவையில் முதல்வராக ஆசைப்படுகிறார் என்றும் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்


இதில் மேலும் படிக்கவும் :