வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (13:58 IST)

புதுவையில் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை: தமிழிசையின் அதிரடி அறிவிப்பு

புதுவையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளதால் அம்மாநில மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் 
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே போவதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த சில மாதங்களாக எழுந்து வருகிறது 
 
இதனை கணக்கில் கொண்டு ஏற்கனவே இந்தியாவில் உள்ள ஐந்து மாநிலங்களில் வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பெட்ரோல் டீசல் விலை அந்த மாநிலங்களில் குறைந்துள்ளது. அதன் அடிப்படையில் தற்போது புதுவையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 2% குறைத்துள்ளார்
 
இது குறித்த உத்தரவு சற்றுமுன் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வாட் வரி குறைப்பால் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 1.40 காசுகள் குறைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதனையடுத்து ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதேபோன்று தமிழக முதல்வரும் வாட் வரியை குறைத்து உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்