தெலுங்கானா ஆளுனராக தமிழிசை பதவியேற்கும் தேதி அறிவிப்பு
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்திரராஜனால் தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏவாக கூட ஆகமுடியவில்லை. ஆனால் இன்று ஒரு மாநிலத்தின் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் பதவி செய்து வைக்கும் மரியாதைக்குரிய கவர்னர் பதவி அவரை தேடி வந்துள்ளது. கனிமொழியிடம் அவர் தூத்துகுடியில் தோல்வி அடைந்தாலும் தற்போது கனிமொழியை விட உயர்ந்த பதவிக்கு தமிழிசை சென்றுவிட்டார் என தமிழக பாஜகவினர் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் தெலங்கானா ஆளுநர் மாளிகை ஆணையர் ஸ்ரீ வேதாந்தம் கிரி தமிழிசையின் இல்லத்திற்கு இன்று மாலை சென்று அவரிடம் நேரில் தெலுங்கானா ஆளுனருக்கான குடியரசுத் தலைவர் ஆணையை வழங்கினார். இதனையடுத்து விரைவில் அவர் பதவியேற்கும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி தெலங்கானா மாநில ஆளுநராக செப்டம்பர் 8-ஆம் தேதி தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தெலுங்கானா ஆளுனரான பின்னர் மற்ற மாநில ஆளுனர்கள் போல் அமைதியாக செயல்படுவாரா? அல்லது புதுவை ஆளுனர் போல் அதிரடி காட்டுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்