அசோக்குமார் தற்கொலை வருத்தம் தருகிறது: தமிழிசை
கந்துவட்டி கொடுமையால் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் நேற்று தற்கொலை செய்து கொண்ட விவகாரம் திரைத்துறையினர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கெளதம் மேனன், சுசீந்திரன், அமீர், நடிகர் கிருஷ்ணா உள்பட பல திரையுலக பிரபலங்கள் கந்துவட்டிக்கு எதிராகவும், அசோக்குமாரின் மரணத்திற்கு இரங்கலும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது: திரைத்துறை அசோக்குமார் கந்துவட்டி தொல்லையால் தற்கொலை வருத்தம் அளிக்கிறது திரைத்துறையின் துயரங்கள் களையப்படவேண்டும் தீர்வுகள்காணமுயற்சிப்போம்' என்று கூறியுள்ளார்
இந்த நிலையில் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமானவர் என்று கூறப்படும் பைனான்சியர் அன்புச்செழியன் தலைமறைவாகிவிட்டார் என்பதும், அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.