1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilisai soundararajan comment on cooker

குக்கர் வீட்டுக்குதான் தேவை ; நாட்டுக்கு அல்ல : தமிழிசை பேட்டி

Tamilisai soundararajan
தினகரன் தரப்பிற்கு அளிக்கப்பட்ட குக்கர் சின்னத்திற்கு தடை விதிக்கப்பட்டது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

 
தினகரன் தரப்பிற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 9ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டது.
 
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன் “குக்கர் வீட்டுக்குதான் தேவை, நாட்டுக்கு அல்ல. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன்” எனக் கூறினார்.
அடுத்த கட்டுரையில்
உடலில் தீ வைத்துக்கொண்டு 3 வது மாடியிலிருந்து குதித்த ஐ.டி,ஐ மாணவர் பலி