1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilisai soundarajan is not replaced

தமிழக பாஜக தலைவர் மாற்றமா? - பாஜக தலைமை விளக்கம்

Tamilisai soundararajan
தமிழக பாஜக தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்படுகிறார் என்கிற செய்திக்கு பாஜக தலைமை விளக்கம் அளித்துள்ளது.

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக நோட்டோவை விட குறைவான வாக்குகளை பெற்று மோசமான தோல்வியை சந்தித்தது. அப்போதே தமிழிசை சவுந்தரராஜனை மாற்ற வேண்டும் என பாஜகவில் புகைச்சல் தொடங்கியது.
 
அதோடு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், அன்புமனி ராமதாஸுக்கும் இடையே சமீபத்தில் மோதல் எழுந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் தமிழிசைக்கு ஆதரவாக பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட யாரும் குரல் கொடுக்கவில்லை. இதில் அதிருப்தியடைந்த தமிழிசை, தலைவர் பதவியில் இருந்து விலக தயாராக இருப்பதாக கட்சி மேலிடத்திற்கு கூறிவிட்டார் என செய்திகள் வெளியானது. எனவே, விரைவில் அவருக்கு பதில் புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 
 
ஆனால், இந்த செய்தியை பாஜக மேலிடம் மறுத்துள்ளது. இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள பாஜக பொதுச்செயலாளர் முரளிதர ராவ் “ தமிழக பாஜக தலைவர் மாற்றம் என ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மையில்லை. இது அடிப்படை ஆதரமில்லாதது. உள்நோக்கம் கொண்டது” என தெரிவித்துள்ளார். 
 
இதையடுத்து, இந்த விவகாரம் முடிவிற்கு வந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
குழந்தையின் வயதை கேட்ட கண்டக்டர் - வச்சு செய்த பயணி