1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 9 ஜூன் 2016 (17:34 IST)

தமிழிசை அல்ல தமிழ்வசை: இளங்கோவன் கிண்டல்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை தமிழ்வசை சவுந்தரராஜன் என்று தான் கூறவேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.


 
 
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் சமீப காலமாக அடிக்கடி ஒருவரை ஒருவர் தாக்கி வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், பாஜகவின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரை தமிழிசை சவுந்தரராஜன் அல்ல, தமிழ்வசை சவுந்தரராஜன் என்று தான் கூறவேண்டும். எனவே அவர் கூறும் குற்றச்சாட்டுகளை பெரிதுபடுத்த தேவையில்லை என்றார்.
 
முன்னதாக வரவிருக்கும் தமிழக உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ் கட்சி மக்கள் நலனுக்காக, திமுக உடன் இணைந்து செயல்படும் என கூறிய அவர், சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்திக்கவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது என்றார்.