1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (12:58 IST)

உடலோடு உரசி சில்மிஷம்! வலி தாங்க முடியாமல் சிகிச்சை எடுத்த நடிகை!

பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகை தன்னை சிமிஷம் செய்த நபரால் மிகுந்த வலி அனுபவித்து பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறி பரபரப்பு கிளப்பியுள்ளார்.
 
சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்த  சீரியல் நடிகை ராணி (வில்லி) "வள்ளி" என்ற தொடரில் இந்திர சேனா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக வந்து இல்லத்தரசிகள் மத்தியில் ஏசப்பட்டு பிரபலமடைந்த இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று கூறியதாவது, "பிராங்க் ஷோக்களால் எனது வாழ்வில் நானும் பாதிக்கப்பட்டு அதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவிற்கு உள்ளாக்கப்பட்டேன். ஒரு சீரியலில் டித்துக்கொண்டிருந்தபோது,   ஒரு ரசிகர் என்னிடம் கையொப்பம் வேண்டும் என்றும் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டார். 
 
நானும் புகைப்படம் எடுக்க சம்மதித்தேன். ஆனால், அவர் என் மீது மோசமாக உராசினார்.  ஏன் இப்படி செய்கிறீர்கள் என நான் கேட்டதற்கு ‘நீ எனக்கு வேண்டும் என்று என்னிடம் அவர் கூறியபோது நான் பயந்தேவிட்டேன். உடனே எனது காதுக்கு அருகில் வந்து சப்தமிட்டபடி ஓடிவிட்டார். அதன் பின்னர் எனது காது மிகவும் வலிக்கத் துவங்கியது. இதனால் நான் ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன் அதனால்தான் பிராங்க் ஷோக்களுக்கு தடை விதித்துள்ளதை நான் வரவேற்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.