வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 ஜூன் 2018 (20:17 IST)

8 வழிச்சாலை குறித்த விழிப்புணர்வு: களமிறங்கிய தமிழிசை!

சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால், ஆளும்கட்சியாக அதிமுகவும், பாஜகவும் இந்த திட்டத்தை எப்படியாவது நடைமுறைப்படுத்தியேயாக வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். 
 
இந்நிலையில், சேலம் சாலை குறித்து ஆலோசிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்தார். அதன் பின்னர் அவர் பின்வருமாறு பேட்டி அளித்தார். 
 
மக்களுக்கு சேலம் 8 வழிச்சாலை பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை. 8 வழிச்சாலை பற்றி அமைச்சர் நிதின் கட்கரியுடன் ஆலோசனை நடத்தினேன். போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்துள்ளேன். 
 
இந்த திட்டத்திற்காக எங்கேயும் மலைகள் குடையப்படாது. மக்களுக்கு சரியான இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார். 8 வழிச்சாலை திட்டம் குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது. மக்களுக்கு இந்த சாலையின் பயன் தெரியவில்லை என இந்த திட்டத்தின் அருமை பெருமைகளை மக்களுக்கு கொண்டு செல்ல விழிப்புணர்வு வேண்டும் என பேசியுள்ளார்.