திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (19:22 IST)

அமைச்சர் பிடிஆருக்கு கேக் ஊட்டிய தமிழிசை.. பாசமழையில் நனைந்த பிரபலங்கள்..!

சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் இன்று பிரதமர் மோடி கொடிய அடைத்து துவக்கிய நிலையில் இந்த ரயில்  மதுரை வந்தபோது அதை தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் அமைச்சர் பிடிஆர் ஆகியோர் வரவேற்றனர். 
 
இதனை அடுத்து கேக் வெட்டி கொண்டாடிய பிரபலங்கள் ஒருவருக்கு ஒருவர் கேக் ஊட்டி கொண்டனர், குறிப்பாக தமிழிசை சௌந்தரராஜன் கேக் வெட்டி அமைச்சர் பிடிஆருக்கு ஊட்டினார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கட்சி வேறுபாடு இன்றி தமிழகத்திற்கு கிடைத்த வந்தே பாரத் ரயிலை  அரசியல் பிரமுகர்கள் கொண்டாடியது பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva