வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 6 ஜூன் 2022 (13:34 IST)

நடிகர் சல்மான் கான், தந்தை சலீம் கானுக்கு கொலை மிரட்டல்!

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் கடிதம் வந்ததால் அவருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு அதிகரிப்பு. 

 
பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் அவருடைய தந்தை சலீம் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக, காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில், மும்பை போலீஸ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடிதம் ஒன்றை சலீம் கானுக்கு வழங்கியதாகவும் அதில் சல்மான் கானுக்கும் அவருடைய தந்தைக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பாந்த்ரா காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 506(2)இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் கடிதம் வந்ததால் அவருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மராட்டிய அரசு அதிகரித்தது.தினமும் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டு விட்டு சல்மான் கான் அமரும் பெஞ்சில் மிரட்டல் கடிதம் இருந்தது.