1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu will have rain for next 4 days

நாளை முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை!

தமிழகம்
நாளை முதல் 4 நாட்களுக்கு புதுச்சேரி, தமிழ்நாடு, காரைக்காலில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 

 
வளிமண்டல கிழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் நாளை முதல் 4 நாட்களுக்கு புதுச்சேரி, தமிழ்நாடு, காரைக்காலில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
 
ஜூன் 13 ஆம் தேதி தென் மேற்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளா, கர்நாடகா, லட்சத்தீவில் பலத்த சூறாவளி வீசும். இன்று தென்மேற்கு, மத்திய கிழக்கு, மராட்டியம், கோவா கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் தென் மேற்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல், மராட்டியம், கோவா, கேரளாவில் பலத்த சூறாவளி வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
அண்டார்டிகா பனியிலும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் - ஏன் இது கவலையானது?