1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tamil nadu weatherman says about rain

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை
சென்னை உள்பட தமிழகத்தில் பொதுவாக மே மாதத்தில் கடுமையாக கோடை வெப்பம் இருக்கும் என்றும் ஆனால் இந்த ஆண்டு கோடை வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் தாண்டவில்லை என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் கோடை மழை சென்னை குளிர்வித்து வரும் நிலையில் சென்னைக்கு இது ஒரு வரம் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்
 
 மிகவும் அரிதாக கோடையில் சென்னையில் மழை பெய்கிறது என்றும் வெப்ப சலனத்தால் இந்த மழை பெய்து உள்ளதாக கூறிய அவர் சென்னையை பொருத்தவரை கோடை மழை பெய்வது மிகவும் அரிதான நிகழ்வு என்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு அல்லது வளிமண்டல மேலடுப்பு சுழற்சி ஏற்பட்டால் மட்டுமே தமிழக கடல் பகுதியில் மழை பெய்யும் என்றும் இவை எல்லாம் இல்லாமல் மழை பெய்வது மிக மிக அரிதாக நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
ஆனால் அதே நேரத்தில் நவம்பர் டிசம்பர் போல மழையை எதிர்பார்க்க வேண்டாம் என்றும் கோடையை குளிர்விக்கும் வகையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva
 
 
அடுத்த கட்டுரையில்
தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!