வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 19 மே 2024 (09:10 IST)

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

Air India
சென்னையிலிருந்து சவுதி அரேபியாவுக்கு ஏற்கனவே ஒரு சில விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சவுதி அரேபியாவில் உள்ள தமாம் என்ற பகுதிக்கு ஜூன் ஒன்றாம் தேதி முதல் சென்னையில் இருந்து புதிய விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து சவுதி அரேபியா, தாய்லாந்து ஆகிய பகுதிகளுக்கு விமான சேவை எண்ணிக்கையை அதிகரிக்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ள நிலையில் சென்னை - பாங்காங் மற்றும் சென்னை - தமாம் ஆகிய இரு வழித்தடங்களில் புதிதாக இரண்டு விமான சேவைகளை புதன்கிழமை தொடங்கியுள்ளதாக ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை - பாங்காங்  விமான சேவை வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்  சென்னை - தமாம் மற்றும் தமாம் - சென்னை இடையே இயக்கப்படும் புதிய விமான சேவை ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து இயங்கும் என்றும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமை என வாரத்தின் இரண்டு நாட்கள் இயக்கப்பட இருப்பதாகவும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

சென்னை - தமாம் இடையே நேரடியாக புதிய விமான சேவை இயக்கப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva