ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 23 மே 2024 (10:54 IST)

கண்டிப்பாக புயல் உருவாகும்.. தமிழகத்திற்கு பாதிப்பா? தமிழ்நாடு வெதர்மேன் கூறுவது என்ன?

வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு நிச்சயம் புயலாக மாறும் என்றும் ஆனால் அதே நேரத்தில் தமிழகத்திற்கு இந்த புயலால் பாதிப்பு இருக்காது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

நேற்று வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள நிலையில் இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்றும் வரும் 25ஆம் தேதி புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறிய போது வங்க கடலில் உருவாகும் புயல் சின்னத்தால் தமிழகத்திற்கு நேரடி பாதிப்பு எதுவும் இருக்காது என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என்று கூறியுள்ளார்

மேலும் மே 25ஆம் தேதிக்கு பிறகு தற்போது உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிச்சயம் புயலாக மாறும் என்றும் வங்கதேசத்தை நோக்கி அது செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

மேலும் கோடை மழை பெய்ததால் பருவ காலத்தில் மழை இருக்காது என்று அர்த்தமல்ல என்றும் பருவ காலத்தில் நிச்சயம் நல்ல மழை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Edited by Mahendran