எதிர் வரும் 19, 20 ஆம் தேதிகளில் மழை, பலத்த காற்று - வானிலை எச்சரிக்கை!
வரும் 19, 20 ஆம் தேதிகளில் தமிழகம் - புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் 19, 20 ஆம் தேதிகளில் தமிழகம் - புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிகப்பட்டுள்ளது.
அதோடு இதே தேதிகளில் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.