1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

இன்று 17 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

rain
தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் நாளை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இன்று மழை பெய்யும் என கூறப்பட்ட 17 மாவட்டங்கள் பின்வருமாறு: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர்
 
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது