திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 4 மே 2022 (14:36 IST)

தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்பு!!

இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் கடலோரப்பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
வடகிழக்கு பருவமழை காலம் முடிந்து குளிர்காலமும் முடிந்து வெயில்காலம் தொடங்கி விட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் அரிதாக கடந்த மார்ச் மாதம் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி தமிழகம் நோக்கி வந்தது. இதனால் சில பகுதிகளில் மழைப்பொழிவு இருந்தது.
 
தற்போது மீண்டும் வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் கடலோரப்பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அதன்படி தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை , திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி , தருமபுரி, சேலத்தில் கனமழை பெய்யலாம் எனவும் நாளை மறுநாள் நீலகிரி , கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரியிலும் கனமழை பேய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதே போல சென்னையில் 2 நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.