1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have rain

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை

5 மாவட்டங்களில் கனமழை
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 

 
ஆம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. நாளை முதல் 11 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 
 
வட தமிழகத்தில் சில பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் லேசான மழையும், நீலகிரி, தேனி, குமரி, நெல்லை, தென்காசி, ஆகிய 5 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னையில், நகரில் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
கொரோனா லாக்டவுன் காரணமாக முந்திரி விலை வீழ்ச்சி!