1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have rain

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கனமழை: வெதர் ரிப்போர்ட்!

தூத்துக்குடி
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் மாதம் மிகப்பெரிய அளவில் பெய்தது என்பதும் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து வந்ததால் பெய்த கனமழையின் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல நீர்நிலைகள் நிரம்பி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.   
 
மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜனவரியிலும் தற்போது மழை பெய்து வருவது பெரும் ஆச்சரியத்தை அளித்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி, தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
டிரம்ப் ஒரு தோல்வியடைந்த தலைவர் - அர்னால்டு விமர்சனம்!