1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2022 (09:41 IST)

தமிழகம் வரும் அகதிகள் எண்ணிக்கை 100ஐ தாண்டியது! – தொடரும் நெருக்கடி!

dhanushkodi
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் அங்கிருந்து தப்பி தமிழகம் வரும் அகதிகள் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வருவதால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் உட்பட அத்தியாவசியமான உணவு பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் பல பகுதிகளில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்குள்ள இலங்கை தமிழ் மக்கள் சிலர் தலைமன்னார் வழியாக தப்பி கடல்வழியாக தமிழ்நாட்டின் தனுஷ்கோடியை அடைந்து வருகின்றனர். நாளுக்கு நாள் இலங்கை அகதிகள் வருகை அதிகரித்து வருகிறது.

பொருளாதார நெருக்கடிக்கு பிறகு இதுவரை 96 அகதிகள் தனுஷ்கோடி வந்தடைந்திருந்தனர். தற்போது மேலும் 8 பேர் இலங்கையிலிருந்து தப்பி வந்து தஞ்சமடைந்துள்ளதால் அகதிகள் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது.