1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (15:17 IST)

தலைநகர் டெல்லியில் இந்திய பிரதிநிதிகள் பேரவையில் தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு உரை!

தலைநகர் டெல்லியில் 10-வது காமன்வெல்த் பாராளுமன்ற கூட்டமைப்பின் இந்திய பிரதிநிதிகள் பேரவையில் தமிழக சட்டபேரவை தலைவர்
அப்பாவு கலந்து கொண்டார்.
 
அப்போது அவர் நிகழ்த்திய உரை......
 
இங்கிலாந்து பாராளுமன்றத்தினை ஜனநாயகத்தின் தொட்டில் என்று அழைப்பர்.
 
ஜனநாயகம் தந்திருக்கும் பெருமை என்னைப் போன்ற சாமானியனுக்கும் இந்த நாற்காலியில் அமர்ந்து சபையை நடத்தும் வாய்ப்பினை எனக்கு வழங்கிய தமிழகத்தின் மாண்புமிகு முதல்வர் திரு.ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
சட்டசபையின் மாண்பை பறைசாற்றும். தமிழ் நாடு சட்டப் பேரவைத் தலைவரின் கலைநயம் மிக்க  நாற்காலியை 1922 - ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 6-ஆம் நாள் நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான விழாவில் சென்னை மாகாண ஆளுநர் வெலிங்டன் பிரபு மற்றும் அவரது வாழ்க்கை துணைவி லேடி வெலிங்டன் ஆகியோரால் அப்போதைய மெட்ராஸ் லெஜிஸ்லேட்டில் கவுன்சில் தலைவருக்கு பரிசாக வழங்கப்பட்ட நாற்காலி தான் இந்த ஆசனம்.
 
இந்திய ஜனநாயகத்தின் முக்கிய பங்காற்றும் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை யின் தோற்றம் 1921- ஆம் ஆண்டில் மெட்ராஸ் பிரசிடென்சியில், மெட்ராஸ் லெஜிஸ்லேட்டில் கவுன்சில் அமைக்கப்பட்டது ஆகும்.
 
தற்போதைய தமிழ் நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்னாடக மாநிலங்கள் மற்றும் ஒடிசா மாநிலத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது ஆகும்.
 
அந்த காலத்தில் இந்தியாவின் சட்டங்களை இயற்றக் கூடிய சட்டமன்ற அமைப்புக்கள். சென்னை, கொல்கத்தா, மும்பை மில் மட்டுமே செயல் பட்டது.
  
கடந்த நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கு, தமிழ் நாடு சட்டமன்றம் பல முன்னோடி சட்டங்கள் மற்றும் தீர்மானங்களை நிறைவேற்றியது. அப்போதைய மெட்ராஸ் லெஜிஸ்லேட்டில் கவுன்சில் 01.04.192-ல் இந்தியாவில் பெண்களுக்கு முதல் முறையாக தேர்தலில் வாக்களிப்பு வழங்கும்  ஒரு வரலாற்று சட்டத்தை நிறைவேற்றியது. இந்திய சட்டமன்ற வரலாற்றில் இட ஒதுக்கீடு குறித்த சட்டத்தை இயற்றிய முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு இதுவாகும் என பல்வேறு தகவல்களை.டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் 10-வது பாராளுமன்ற கூட்டமைப்பின் இந்திய பிரதிநிதிகள் முன் தமிழக சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு பதிவு செய்தார்.