1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 30 நவம்பர் 2022 (11:44 IST)

இணைகிறது ரயில்வே மற்றும் அஞ்சல் துறை: புதிய பார்சல் சேவை தொடங்க திட்டம்!

parcel
தமிழகத்தில் ரயில்வே மற்றும் அஞ்சல் துறை இணைந்து புதிய பார்சல் சேவை தொடங்க இருப்பதாகவும் இந்த பார்சல் சேவை குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
தமிழகத்தில் ரயில்வே அஞ்சல் துறை இணைந்து புதிய பார்சல் சேவை தொடங்க உள்ளதாக ரயில்வே வாரியத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். ரயில்வே மற்றும் அஞ்சல் துறை இணைந்து உருவாகும் புதிய பார்சல் சேவை ஏற்கனவே வாரணாசியில் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் அவை மக்களுக்கு மிகப்பெரிய பயன்பாடாக இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இதனை அடுத்து தமிழ்நாட்டிலும் விரைவில் ரயில்வே அஞ்சல் துறை இணையும் புதிய பார்சல் சேவை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அதற்கு கோவையில் உள்ள தொழில் அதிபர்கள் நிறுவனர்கள் தொழிற்சாலை உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளதாகவும் ரயில்வே வாரியத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார் 
 
கனரக பொருட்களை எடுத்துச் செல்லும் வகையில் ரயில் பெட்டிகளில் நவீன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில் நிலைங்களுக்கு பார்சல்களை மக்கள் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை என்றும் புதிய பார்சல் சேவையில் வீடுகளில் இருந்து ரயில் நிலையத்திற்கும், ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்கும் பார்சல் சேவையை கொண்டுபோய் சேர்க்கும் பணியை அஞ்சல்துறை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva