வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 20 மே 2018 (09:47 IST)

ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்: தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

ஊழலை ஒழிப்போம், ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம் என திராவிட கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளும் கொள்கைகளாக வைத்திருக்கும் நிலையில் இந்தியாவிலேயே ஊழல் அதிகமாக உள்ள மாநிலம் தமிழகம் தான் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
 
சிஎம்எஸ்-இந்தியா என்ற நிறுவனம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஊழல் அதிகம் உள்ள மாநிலங்கள் எது என்பது குறித்து ஆய்வு செய்து அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அரசு சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கு தமிழகத்தில்தான் அதிகளவு லஞ்சம் பெறப்படுவதாக இந்த நிறுவனத்தின் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
 
தமிழகத்தை அடுத்து தெலுங்கானா 2வது இடத்திலும், 4வது இடத்தில் ஆந்திராவும் உள்ளது. மேலும் பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் ஊழல் தடுப்பு மிக மோசமாகவே உள்ளதாகவும், இந்த விஷயத்தில் ராஜஸ்தான், கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்கள் ஓரளவு கவனம் செலுத்தி வருவதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 
ஊழல் அதிகமாக உள்ள மாநிலங்களில் போக்குவரத்து, போலீஸ், வீட்டுவசதி, நில ஆவணங்கள், சுகாதாரம், மருத்துவமனை போன்ற இடங்களில்தான் ஊழல் அதிகமாக நடப்பதாகவும், அதேபோல் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்காக அதிகளவு நபர்கள் லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகின்றன