திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (14:46 IST)

ஒரே நேரத்தில் 60,000 நபர்கள் விண்ணப்பம்: போக்குவரத்து துறை இணையதளம் முடங்கியதால் பரபரப்பு..!

Driver Job Recruitment
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று இன்று காலை அறிவித்த நிலையில் ஒரே நேரத்தில் ஏராளமான பேர் இந்த இணையதளத்திற்கு சென்று விண்ணப்பித்ததால் போக்குவரத்து துறையின் இணையதளம் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஒரே நேரத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக இணையதளத்தில் 60 ஆயிரம் நபர்கள் விண்ணப்பித்ததாகவும் இதனால் இணையதளம் முடக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெவித்து உள்ளனர்\
 
 விண்ணப்ப பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே இணையதளம் முடங்கியதாகவும் இணையதளத்தை சரி செய்யும் பணிகள் தற்போது நடந்து கொண்டிருப்பதாகவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக இணையதளம் தெரிவித்துள்ளது. 
 
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் இன்று முதல் செப்டம்பர் 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கும் காலம் உண்டு என்றும் இன்று காலை அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran