1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 12 ஆகஸ்ட் 2023 (09:38 IST)

கலைஞர் மகளிர் உரிமை திட்டம்: விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இதனை அடுத்து ஏராளமான மகளிர் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 
 
வரும் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கலைஞர் மகளிர் உரிமை சட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இதுவரை இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்காதவர்கள் மேற்கண்ட தேதிகளில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்
 
Edited by Mahendran