வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 16 நவம்பர் 2022 (16:20 IST)

சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்! ராமதாஸ்

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த மணிகண்டன்,அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவியைக் கடத்தி கட்டாயத் திருமணம் செய்துகொண்டதில், சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண உதவி அறிவிக்க வேண்டுமென டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்’’, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை  அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் கடத்தி, கட்டாயத் திருமணம் செய்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதால் மன உளைச்சலுக்கு உள்ளான சிறுமி நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிகழ்வு வேதனையளிக்கிறது  சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மனித நேயமற்றவை; காட்டுமிராண்டித் தனமானவை. படித்து, வாழ்க்கையில் முன்னேற்ற வேண்டிய சிறுமிகளை கடத்தி, கட்டாயத் திருமணம் செய்யும் காட்டுமிராண்டித் தனத்திற்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும்!

சிறுமியை கடத்திச் சென்று சீரழித்து தற்கொலைக்கு ஆளாக்கிய மணிகண்டனும், அவருக்கு துணையாக இருந்தவர்களும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும்; சிறுமியின் குடும்பத்திற்கு  ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்!’’ என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj