1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 14 செப்டம்பர் 2023 (10:17 IST)

மெட்ரோ போல் மாறும் பறக்கும் ரயில் நிலையங்கள்: டெண்டர் வெளியீடு..!

Chennai Train
சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான வணிக திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி விரைவில் தொடங்கியுள்ளது.
 
பறக்கும் ரயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்து மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் உள்ள மந்தவெளி, வேளச்சேரி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படவுள்ளது
 
இதற்காக சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம்  சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.  டெண்டர் பணிகள் முடிந்ததும் விரைவில் ரயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்யும் பணிகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது
 
 மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் பறக்கும் ரயில் நிலையங்களும் மாற்றப்பட இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Mahendran