ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (08:09 IST)

சென்னையில் மெட்ரோ ரயில் பணி: ராட்சத இயந்திரம் மோதி வீடு சேதம்

சென்னையில் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்ட ராட்சத இயந்திரம் மோதி வீடு சேதம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னை போரூர் அஞ்சுகம் நகரில் பார்த்தியநாதன் என்பவர் வீட்டின் மீது  மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்ட இயந்திரம் மோதியது. இதனால் வீட்டின் மேல் தளத்தில் சுவர்கள் மற்றும் மேற்கூரை உடைந்து சிதறியது
 
இதனால் பார்த்தியநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியேறி உயிர் தப்பித்தனர். ஆனால் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், ஃபேன் போன்ற உடமைகள் சேதமாகின. 
 
முதலில் பூகம்பம் வந்ததாக நினைத்து மற்ற குடியிருப்பு வாசிகளும் வீட்டில் இருந்து வெளியேறினர். அதன்பிறகுதான் உயரமான இயந்திரத்தை கையாண்ட ஆபரேட்டர் வீட்டை கவனிக்காமல் செயல்பட்டதால் விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இதனால் மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவன ஊழியர்களை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva