ஞாயிறு, 15 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (19:17 IST)

அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு..!

assembly
அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசு அலுவலர்கள், அலுவலக நேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிய வேண்டும் என்றும், துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் இதுகுறித்து ஊழியர்களுக்கு வலியுறுத்த வேண்டும் என்றும், மனித வள மேலாண்மை துறை, மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணியாத அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதால், அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை தனியார் நிறுவன ஊழியர்கள் மட்டுமே அடையாள அட்டையை அணிந்த நிலையில், தற்போது அரசு ஊழியர்களுக்கும் அடையாள அட்டை கட்டாயம் என்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு, அரசு ஊழியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.


Edited by Siva