திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 23 மார்ச் 2022 (15:16 IST)

தமிழக மீனவர்கள் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

நாகை காரைக்கால் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி  த நாட்டைச் சேர்ந்த மீனவர்களையும், 24 ஆம் தேதி 2  விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது.

இந்நிலையில், இவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

இன்று இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இந்திய அரசு 18 ஆயிரம் கோடி கொடுக்க ஒப்புக்கொண்டுள்ள நிலையில் ரூ. 7500 கோடி ரூபாய் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.