1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu districts to have heavy rain

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை: எங்கெல்லாம் தெரியுமா?

தமிழகம்
தமிழகத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மற்றும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 
 
அதன்படி, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்கிளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
அனைத்தும் டோர் டெலிவரி… மக்கள் மகிழ்ச்சி