1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 2 ஜூன் 2024 (11:18 IST)

உலகின் நம்பர் 1 வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா: முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துகள்

நார்வே செஸ் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தாவுக்கு  முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
 
உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை 3வது சுற்றில் தோற்கடித்தது அபாரமான சாதனை என்றும், 5வது சுற்றில் உலகின் நம்பர் 2 வீரரான பேபியானோ கருவானாவை தோற்கடித்ததும் அபாரமான சாதனை என்றும், முதல் 10 இடங்களுக்குள் பிரக்ஞானந்தாவை  வரவேற்கிறோம் என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
மேலும் உங்கள் திறமையை கண்டு ஒட்டுமொத்த செஸ் உலகமே வியந்து நிற்கிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தியதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
நார்வே செஸ் போட்டியில் நேற்று நடந்த போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சன் மற்றும் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதினர். இந்த போட்டியில்  3வது சுற்றில் கார்ல்சனை வீழ்த்தி 5.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா முதலிடத்தில் உள்ளார். கிளாசிகள் போட்டியில் முதல்முறையாக கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னதாக  நார்வே செஸ் தொடரின் முதல் சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, பிரான்சின் அலிரேசா ஆகிய இருவரும் 'கிளாசிக்கல்' முறையில் மோதினர். இந்த போட்டியின் 44வது நகர்த்தலில் இருவரும் டிரா செய்ய ஒப்புக்கொண்டனர்.  அதன்பின் 'ஆர்மேஜ்டன்' முறையில் பிரக்ஞானந்தா, கார்சலனுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட பிரக்ஞானந்தா, 38 வது நகர்த்தலில் கார்சலனை வீழ்த்தினார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
 
Edited by Siva